விழிகளில் விழுந்த தேவதை

 

அவள் விரித்த கூந்தலும்,
அகண்ட விழிகளும்,
நடுங்கிய இதழும்,
சிறுத்த கழுத்தும்,
பருத்த கன்னமும் ,
மீறிய மார்பும்,
வளைந்த இடையும்,
பனிந்த நடையும்,
பயந்த பார்வையும்,
முன்னமைப்பில் சீரற்றும்,
பின்னமைப்பில் குடுவை போன்றும்,
பறக்கும் கொடி போல அசைந்தாடி வரும் தேவதை,
எந்தன் விழிகளில் விழுந்த அழகிய தேவதை.

Advertisements

காதலா காமமா காட்சியா

images (1)

கொட்டிய மழையில்,
உன் விழி பார்வையில் நனைந்த என் தேகம்,
தெரியவில்லை இது காதலா காமமா என்று,
நனைந்த என் உடம்பு குளிரால் எங்கும் நடுங்க,
ஒரு இடம் மட்டும் பற்றி எரிய, அதன் அனல் எங்கும் பரவுகிறதே.

“ஓ இது காமம் அல்ல காதலே”

உன் முகத்தினில் விழுந்த மழைத்துளிகள் முகமெங்கும் ஆனந்த ஓட்டம் எடுக்க ,
அத்துமீறிய அவைகளை உன் கையால் வாரி எடுத்து வீச, இறுதில் உன் கைகளை முத்தமிட்டு ஆனந்தமாய் மண்ணில் விழுந்து மடிந்தனவே.

உன் நனைந்த ஆடையும் நடுங்கிய தேகமும், எவனையும் மதி மயங்க செய்யும் இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா.

உன் உடம்புக்கும் உடைக்கும் இருந்த இடைவெளியை இந்த மழை சேர்க்க , உன் உடம்போடு ஒட்டிய ஆடையும் சீரற்ற உன் அமைப்பும் கண்டு காமம் பற்றி எரிகிறதே ,   

    “ஓ இது காதல் அல்ல காமமே”.

உன்னை தாண்டி உருண்ட என் பயணம் காட்சிகளாய் என் நெஞ்சில் ,

“ஓ இது காதலுமல்ல காமமுமல்ல காட்சியே”.

images (2)

புல்லாங்குழல் இசை

ஜீவனில் பிறந்து,

    பிறந்த பின் கருவறையை அடைந்து,

           இசையாக வெளிவந்து ,

                  காற்றினில் தவழ்ந்து,

                        காதினில் நுழைந்து,

                              ஜீவனில் கரையும் இசையே.

Screenshot_12

வேண்டும் விடுதலை

in

அரசியலை வியபாரமாக்கி, மக்கள் பணத்தை முதலீட்டாக்கி,
ஊழலில் ஊறிய அரசியல் வியாதிகளிடமிருந்து வேண்டும் விடுதலை !

பொருளாதார மேம்பாட்டற்ற தனிநபர் ஆதாயங்களை உள்ளடக்கிய‌,
வளர்ச்சித்திட்டங்களிலிருந்து வேண்டும் விடுதலை !

கடமையை மறந்து, சேவையை புறந்தள்ளி, நாட்டை செல்லரிக்கும்
அரசு அதிகாரிகளிடமிருந்து வேண்டும் விடுதலை !

எல்லாவற்றையும் விவாதத்திற்குட்படுத்தி வளர்ச்சியை பாதிக்கும்
அர்த்தமற்ற‌ விவாதத்திலிருந்து வேண்டும் விடுதலை !

இயற்கைத்தாயின் மேனியை சிதைக்கும்
கயவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை !

உழைக்கும் கரங்களில் ஊதியம் நிறைய
முதலாளிகள் மனதில் வேண்டும் விடுதலை !

ஜாதிய சிந்தனையில் மனித தன்மைன்றி
வாழும் மக்கள் மனதில் வேண்டும் விடுதலை !

மதத்தை முன்னெடுத்து நமது ஒருமைபாட்டைக் குலைக்கும்
தாசிய மக்களிடமிருந்து வேண்டும் விடுதலை !

நாட்டை வெட்கி தலைகுனிய வைக்கும், கட்டுபாட்டற்ற
காமத்தில் திலையும் மக்கள் மனதில் வேண்டும் விடுதலை !

பேச்சினை,எழுத்தினை, ஓட்டினை அதிகாரத்திற்கோ அல்லல்
பணத்திற்கோ விற்கும் மக்கள் மனதில் வேண்டும் விடுதலை !

கேலிக்கைக‌ளை முன்னிறுத்தி, புரட்சியையும் போராட்டத்தையும்
மறந்த மக்கள் மனதில் வேண்டும் விடுதலை !

விடுதலை ! விடுதலை ! விடுதலை ! விடுதலை ! விடுதலை ! விடுதலை !

in1

அவளும் அவள் நினைவும்

அவளும் அவள் நினைவும்


என்னவளே,
உன்னை என் சுவாசத்தில் வைத்தேனடி,
சுவாசத்தில் இருந்ததால் என்னவோ நீ என்,
இரத்த‌தில் கலந்து இதயத்தில் குடியேறிவிட்டாய்.
குடியேறிய கனமே என் சிந்தனையை மாய்த்து உனதாக்கினாய்,
நானோ என்னை மறந்து உன்னை நினைத்து,
காற்றை உண்டு வாழும் சித்தனாகி போனேன்.
உன்மையில் கட்டையாக இருந்தால் கரைப்பான் அறிக்கப்பட்டுருப்பேன்,
உன் நினைவில் இருந்த காலங்களில்.
நான் கன்னை மூடி கனவில் உன்னை வைத்து,
கனா கன்ட நாள் முதல்,
“தலை கனமானது
தலையனை பாரமானது”.
உன் பாத சுவடுகளை அதிகம் பதம் பார்த்தவன்,
நானாக தான் இருப்பேன் உன் பின்னால் வந்த பொழுதுகளில்
என்னவளே,
உன்னை என் சுவாசத்தில் வைத்தேனடி…

தாயின் கருப்பை

“தின பொழுதும் கற்பனை கண்டு,
நித்தம்   நித்தம்  வயிறு வீங்கி,
கற்பனையிலே என்னை உவமைப்படுத்தி,
கருப்பையிலே அதனை உருவகபடுத்தி,
தொப்புள் கொடியிலே என் உயிரோட்டத்தை தொடக்கி,

தினம் பல செல்லாய் என்னை பெருக்கி,
பிறவா வசம் இருந்த என்னை
பிரசவத்திலே பயிரிட்டவலே”